Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய சீரியலில் களம் இறங்கிய இளம் நடிகை நீபா! பல வருடங்களுக்கு பின் - வீடியோ இதோ

காவலன் படத்தில் வடிவேலுவுக்கு மனைவியாக நடித்த நடிகை நீபாவை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. பள்ளிக்கூடம், கவண், கண்ணும் கண்ணும் என மற்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

காவலன் படத்திற்கு பிறகு காமெடி கதாபாத்திரங்கள் வந்ததாம், ஆனால் நீபா வேண்டாம் என தவிர்த்திருக்கிறார். சின்னத்திரையில் ரோஜா கூட்டம், பந்தம் சீரியல்களில் நடித்திருந்தார்.

கடந்த 2013 ல் அவருக்கு திருமணமானது. பின் கணவர், குடும்பம் என பிசியாக இருந்தார். சினிமா பக்கம் வரவில்லை. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

ஆனால் சமூகவலைதளத்தில் இவரின் பெயரில் யாரோ சிலர் போலியாக பக்கங்கள் தொடங்கி தவறாக செயல்களில் ஈடுபட்டுவருவதாக அறிந்ததும் காவல் துறை மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

6 வருடங்கள் கழித்து கலர்ஸ் தமிழில் மைனா சீரியல் நடித்து வருகிறாராம். கணவரும் நல்ல கேரக்டர்கள், வாய்ப்பு வந்தால் நடிக்கலாம் என அவரின் கணவர் சம்மதம் கொடுத்துவிட்டாராம்.