Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடம் பிடித்து கேட்ட நமீதா! கடைசி வரை கொடுக்காமல் ஏமாற்றிய பிக்பாஸ் - வெளிவராத விசயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்டு அசத்திய போட்டியாளர்களில் ஒருவர் நடிகை நமீதா. அவருக்கு இன்னும் பெரும் ரசிகர்கள் படை உள்ளது.

உள்ளிருக்கும் போட்டியாளர்களோடு சின்ன சின்ன சண்டை, வாக்கு வாதம் வந்து போனதும், அவர் தமிழ் பேசும் வித்தியாசமான தொனியும் பலருக்கும் பிடித்து போனது.

இந்நிகழ்ச்சிக்கு பின் திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது அகம்பாவம் என்னும் படத்தில் பத்திரிக்கை நிரூபராக நடித்துள்ளார். மலையாளத்திலும் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் அவரையும் அவரின் கணவரை நமது சினிஉலகம் பிரத்யேக நேர்காணல் செய்தது. நமீதா அதிகம் சுத்தம் பார்ப்பார் என்பது பிக்பாஸ் வீட்டிலே நாம் கண்டது தானே.

ஆனால் அவருக்கு பல் துலக்குவதில் கொஞ்சம் சோம்பேறி தனமாம். இதனால் எலக்ட்ரானிக் தானியங்கி பல் துலக்கும் இயந்திரம் பயன்படுத்துகிறாராம்.

பிக்பாஸ் வீட்டிலும் இதனை 10 நாட்கள் பயன் படுத்தினார். பின் பேட்டரி தீர்ந்துவிட்டதால் பிக்பாஸிடம் நமீதா கேட்க அவர் கடைசி வரை அதை கொடுக்கவே இல்லையாம்.