தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை கீதாஞ்சலி.
இவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
சீனியர் என்டிஆர் இயக்கி நடித்த சீதாராம கல்யாணம் படத்தின் மூலம் 1961ல் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அவர். அதன்பிறகு டாக்டர் சக்கரவர்த்தி, லேதா மனசுலு, தேவதா, Bobbili Yuddham, Gudachari 116 உள்ளிட்ட படங்களில் நடித்தார் அவர்.
கடைசியாக தமன்னா நடித்த குயின் பட தெலுங்கு ரீமேக் 'தட் இஸ் மகாலட்சுமி' படத்தில் தான் அவர் நடித்திருந்தார். கீதாஞ்சலியின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
#NandamuriBalakrishna is saddened over the sudden demise of veteran actress #Geethanjali garu
— BARaju (@baraju_SuperHit) October 31, 2019
May her soul rest in peace ☮ pic.twitter.com/CzV3gGsBWw