Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறு வயது புகைப்படத்துடன் தகாத வார்த்தையில் மீம்! கோபத்துடன் வெளுத்துவாங்கிய நடிகை ராஷ்மிகா

நடிகை ரஷ்மிகா மந்தனா தான் தற்போதைய இளசுகளின் ஹார்ட் த்ராப். அந்த அளவுக்கு குறுகிய காலத்தில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். தெலுங்கு சினிமாவில் மட்டுமே இதுவரை நடித்துவந்த அவர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ரஷ்மிகாவின் இளம் வயது புகைப்படங்கள் சில பரவின. அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலானது.

அதை வைத்து சிலர் ஒரு மீம் வெளியிட்டுள்ளனர். அதில் ரஷ்மிகா பற்றி தகாத வார்த்தைகள் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். Dagar என்ற வார்த்தைக்கு கன்னடத்தில் விபச்சாரி என்று அர்த்தம்.

இந்த மீம் பார்த்து கோபமான ரஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். "இப்படி செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது. நடிக்கும் படம் பற்றி என்ன வேண்டுமானால் பேசுங்கள், உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எந்த ஒரு நடிகர் பற்றியோ அவர்களது சொந்த வாழ்க்கை பற்றியோ இழிவாக பேசாதீர்கள்" என அவர் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.