Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் வெற்றிப்பெற்றது சரியா என கேட்ட நடிகை திடீர் மன்னிப்பு கேட்டு டுவிட்

பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பெரியவர்களுக்கான 7 சீசன் அண்மையில் நடந்து முடிந்தது.

இதில் வெற்றியாளராக மூக்குத்து முருகன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு நடிகை ஸ்ரீபிரியா எதிர்ப்பு தெரிவித்து டுவிட் போட்டார். சத்ய பிரகாஷ் வெற்றியாளராக வராததில் இருந்து போங்காக நடந்து கொண்டீர்கள். எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை கௌரவிப்பீர்கள் என நம்புவதாக டுவிட் போட்டார்.

இன்று அவர் அதே சூப்பர் சிங்கர் பற்றி டுவிட் செய்துள்ளார். அதில்,சூப்பர் சிங்கர் வெற்றியாளர் குறித்து தவறாக பதிவு செய்துவிட்டேன். கடந்த சிறுவர்களுக்கான சீசனில் ஹிருத்திக்கிற்கு வெற்றியாளர் விருது கொடுத்தது சரியான விஷயம்.

மன்னிப்பு கேட்கிறேன் என பதிவு செய்துள்ளார்.