Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓரினச்சேர்க்கையாளராக மாறும் இளம் நடிகை! பிரபல நடிகைகள் போல எடுத்த அதிரடி முடிவு

கண்டேன் படத்தில் சாந்தனு, சந்தானத்துடன் நடித்துவர் நடிகை ராஷ்மி கௌதம். பல தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா என சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

தெலுங்கு வட்டாரத்தில் பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ள இவர் தற்போது பிரபல நடிகைகளான ராதிகா ஆப்தே, காஜல் அகர்வால், கைரா அத்வானி ஆகியோர் போல வெப் சீரிஸ் களத்தில் இறங்கியுள்ளார்.

சேகர் சுரி இயக்கும் இந்த தொடரில் அவர் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறாராம். ஏற்கனவே தெலுங்கில் வந்த குண்டூர் டாக்கிஸ் படத்தில் இதே கதாபாத்திரத்தில் ராஷ்மி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.