Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லவ் டார்ச்சர் கொடுக்கும் நபர்.. பிக்பாஸ் மீரா மிதுன் காதலர் மற்றும் நண்பருடன் பேசும் போன் ஆடியோ லீக்

பிக்பாஸ் 3ல் போட்டியாளராக பங்கேற்ற நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்.

தற்போது மீரா மிதுன் பேசியுள்ள ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. அதில் மீரா மிதுன் அவரது காதலர் சுந்தர் மற்றும் மணி என்பவர்களுடன் பேசுகிறார்.

தனக்கு 8 வயது குறைந்த பையன் ஒருவர் லவ் டார்ச்சர் 2 வருடங்களாக கொடுத்து வருவதாக கூறுகிறார். தனக்கு தெரிந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான் அவர் என கூறும் மீரா மிதுன் அந்த பையன் வெட்டி தான் என்றும், அம்மா யோகா டீச்சர் என்றும் அப்பா ஆச்சாரி என்றும் அவனின் பின்னணி பற்றி கூறுகிறார்.

அதுமட்டுமின்றி இந்த அரைமணி நேர ஆடியோவில் மீரா மிதுன் தன்னை பல இயக்குனர்கள் படவாய்ப்புக்காக compromise செய்துகொள்ளும்படி கேட்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபல தமிழ் நடிகர் (இயக்குனரும் கூட) பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை வெளியில் ஒரு ரிசார்டில் சந்திக்க அழைத்ததாகவும், தான் மறுத்ததால் மறுநாள் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் சந்திக்கலாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.