Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய தமிழ் நடிகையின் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்! பெரும் நஷ்டம்! கைகொடுத்து காப்பாற்றுவது யார் தெரியுமா

அஜித், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அனிதா கேரக்டர் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனா ஹெய்டன். தொடர்ந்து விஜய் நடித்த ஷாஜகான், விஷால் நடித்த சிவப்பதிகாரம், ரஜினி நடித்த குசேலன், ஜீவா நடித்த ரௌத்ரம், கோ என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பணியாற்றி வந்தவருக்கு அண்மைகாலமாக வாய்ப்புகள் பெரியளவில் இல்லை. கனிமொழி என படத்தை தயாரித்து பெரும் நஷ்டம் அடைந்தார். மேலும் செயற்கை வைர நகை வியாபார தொழிலில் இறங்கியது அவருக்கு பெரும் நஷ்டத்தை அளித்துள்ளதாம்.

இந்நிலையில் அவருக்கு மலையாள படங்கள் தான் மிகவும் கொடுத்ததாம். குணச்சித்திரம், காமெடி கேரக்டர்களில் நடித்து வரும் அவர் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது பச்ச மாங்கா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

விடா முயற்சியால அவருக்கு தமிழில் ஒரு படத்தில் தற்போது போலிசாக நடித்து வருகிறாராம். மேலும் திரிஷா நடித்த பரமபத விளையாட்டு படத்தில் வில்லியாகவும், வரலட்சுமி நடிக்கும் சேசிங் படத்திலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் அவர் நடிப்பு தான் என்னை காப்பாற்றி வருகிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.