பலரையும் திரும்பி பார்க்க வைத்த பிக்பாஸ் கஸ்தூரி! அதிரடி முடிவு! என்ன சொல்லியிருக்கிறார்கள்
நடிகை கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்க முடியுமா என்ன. சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் இவரின் சமூக வலைதள கருத்து பகிர்வு பலருக்கும் அத்துபடி.
அரசியல், நாட்டு நடப்பு என பல விசயங்கள் குறித்து தன் மனதில் இருக்கும் எண்ணங்களை கருத்து வெளியிடும் அவர் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய பல விசயங்களை நீக்கிவிட்டார்கள் என குற்றச்சாட்டும் வைத்து வந்தார்.
அண்மையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசு வழங்கி வரும் பால் பாக்கெட்டில் இனி திருக்குறள் இடம் பெறும் என கூறிவந்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தன் கருத்தை வெளிப்படுத்தி தன் ஆதரவையும் பகிர்ந்துள்ளார்.
பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும் , ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம்தான்.
— Kasturi Shankar (@KasthuriShankar) November 14, 2019