Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் கற்பது கடினம்.. ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரணாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். தலைவி என பெயரிடப்பட்ட இந்த படத்தினை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

ஷூட்டிங் இந்த வாரம் துவங்கிய நிலையில் கங்கனா செய்தியாளர்களை சந்தித்த போது தமிழ் கற்பது கடினம் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் 'ஆரம்பத்தில் தமிழ் முழுமையாக கற்றுக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆங்கிலம் கற்றது போலவே தமிழ் கற்பது சுலபம் என நினைத்தேன். ஆனால் அது மிகவும் கடினமாக இருப்பதால் படத்திற்கு தேவையானதை மட்டும் கற்க ஆரம்பித்துள்ளேன்.'

'வசனங்களை மனப்பாடம் செய்து தான் நடிக்கிறேன்' என கூறியுள்ளார் அவர்.