புதிய வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா! விலையை கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
உலக அளவில் அதிகம் பாப்புலர் ஆன இந்த நட்சத்திர ஜோடி தற்போது அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் Encino என்ற இடத்தில் வீடு வாங்கியுள்ளனர்.
20 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டிற்கு அவர்கள் 20 மில்லியன் டாலர்கள் விலை கொடுத்துள்ளனர். இது இந்திய ருபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 144 கோடி ருபாய்.
மிக பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த வீட்டில் மொத்தம் 7 பெட்ரூம் மற்றும் 11 பாத்ரூம் உள்ளது.