Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது இரண்டாவது திருமணம் குறித்து பேட்டி கொடுத்த நடிகை அதிதி ராவ் ஹிடாரி- மாப்பிள்ளை?

வான் வருவான் வான் வருவான் என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் ஆசை நாயகியாக மாறியவர் அதிதி ராவ்.

இவர் தமிழ், ஹிந்தி என மாற்றி மாற்றி நடித்து வருகிறார். அடிக்கடி வித்தியாசமான போட்டோ ஷுட் எல்லாம் நடத்துவார், அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகும்.

அண்மையில் இவரிடம் இரண்டாவது திருமணம் குறித்து பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு சிறு வயதில் இருந்து ராஜா காலத்து திருமணம் போல் நடக்க வேண்டும் என்பது ஆசை.

ராஜாக்கள் காலத்து மிகப்பெரிய கோட்டையில் நடக்க வேண்டும். அந்த கோட்டை பீச் ஓரத்தில் இருக்க வேண்டும், திருமணம் முடிந்ததும் பீச்சில் ஓட வேண்டும்.

நடனம் ஆட வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது என பேசியுள்ளார், ஆனால் மாப்பிள்ளை பற்றி எதுவும் அவர் கூறவில்லை.

மத்திய அரசின் வருவாய் துறையில் அதிகாரியாக உள்ள சத்யதீப் மிஸ்ரா என்பவருடன் அதிதிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பின் விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.