Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை நன்றாக தெரியும், ஆனால் விஜய்யை சுத்தமாக தெரியாது- ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ஹாட் டாக்

சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் சமூக பிரச்சனைகளோ அல்லது தங்களது துறையில் ஏதாவது பிரச்சனையா அதைப்பற்றி வெளியே தைரியமாக பேசக் கூடியவர்கள்.

அப்படிபட்ட பிரபலங்களில் ஒருவர் தான் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. தன்னிடம் பலர் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தவறாக நடந்து கொண்டதாக புகைப்படத்துடன் பிரச்சனைகள் கூறி வந்தார்.

இப்போது சென்னையில் வந்து செட்டில் ஆகி கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் ஸ்ரீரெட்டி, உதயநிதி ஸ்டாலின் குறித்து ஒரு சர்ச்சை எழுப்பியதாக செய்தி வந்தது.

அதுகுறித்து ஸ்ரீரெட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பில், நான் அவரை நேரில் பார்த்தது கூட கிடையாது, அப்படி ஒரு செய்தியை யார் எழுப்பினார்கள் என்பது தெரியவில்லை, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

பின் நடிகர்களை பற்றி பேசும்போது, தெலுங்கில் அஜித்தை நன்றாக தெரியும், நான் இந்த பிரச்சனைகளுக்கு முன்பே பல பேட்டிகளின் அவரை பற்றி பேசியுள்ளேன்.

ரஜினி அவர்களை கொஞ்சம் தெரியாது, விஜய்யை சுத்தமாக தெரியாது என பேசியுள்ளார்.