Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரன் ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோயின்

தனுஷின் அசுரன் படத்தினை தெலுங்கில் விரைவில் ரீமேக் செய்யவுள்ளனர். அதில் தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் தான் ஹீரோவாக நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த் அடலா இயக்கவுள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளது யார் என்பது தற்போது வரை குழப்பமாக உள்ளது. முதலில் நடிகை ஷ்ரேயா ஹீரோயினாக நடிக்கிறார் என கூறப்பட்டது.

ஆனால் அதன் பிறகு அனுஷ்கா ஷெட்டியை படக்குழு அணுகியுள்ளது என்றும் செய்திகள் வந்தது. ஆனால் இந்த வாய்ப்பை ஏற்க நடிகை அனுஷ்கா மறுத்துவிட்டாராம்.