Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹிந்தியில் பேசுங்க என்று சொன்னவருக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்த டாப்ஸி

டாப்ஸி தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் பிங்க் என்ற ஹிந்தி படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாகிவிட்டார்.

அதை தொடர்ந்து இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் கலக்கி வருகின்றார், இந்நிலையில் டாப்ஸி சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார்.

அப்போது அவர் ஆங்கிலத்தில் பேச, ஒரு நிருபர் குறுக்கிட்டு, ஹிந்தியில் பேசுங்கள் என்று சொன்னார், உடனே டாப்ஸி ‘இங்கு அனைத்து மொழி பேசுபவர்களும் வந்துள்ளார்கள்.

நான் ஹிந்தியில் பேசினால் அவர்களுக்கு புரியுமா?, நான் பாலிவுட் நடிகை மட்டுமில்லை, தமிழ் படங்களில் கூட நடித்துள்ளேன், தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா?, அதனால் தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.