Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெப் சீரிஸில் நடிக்கும் சமந்தா.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் சிறந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் இவர்.

சமந்தா நீண்டகாலமாக வில்லி கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்ததாம். அந்த ஆசை தற்போது வெப் சீரிஸ் மூலமாக நிறைவேற உள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவில் 'family man 2' சீரிஸில் தான் சமந்தாவை நெகடிவ் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

இதனை அதிகாரபூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா.