Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டை விற்றுவிட்டாரா நடிகை ராகுல் ப்ரீத்? திடீரென பரவிய செய்திக்கு நடிகை ரியாக்ஷன்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் ராகுல் ப்ரீத். அவர் தற்போது ஹிந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டை விற்றுவிட்டார் என செய்திகள் பரவியது. பெங்களூரில் அவர் புது வீடு வாங்குகிறார் எனவும் செய்திகள் வந்தது. இதை பார்த்து கோபமான ராகுல் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

"இப்படி செய்தியாளர்கள் என கூறிக்கொள்பவர்களுக்கு எங்கிருந்து தான் இப்படி தவறான செய்திகள் கிடைக்கிறது என வியப்பாக இருக்கிறது. நான் ஹைதராபாத்தில் வீடு வாங்கியபோது அதை யாரோ எனக்கு கிப்ட் செய்தார்கள் என கூறினார்கள். தற்போது அதை விற்றுவிட்டு பெங்களூரில் வாங்குகிறேன் என்கிறார்கள். நான் சொல்வது ஒன்றே ஒன்று தான், 'கற்பனை செய்வதை விட்டுவிட்டு உண்மையான செய்திகளை கூறுங்கள்' " என தெரிவித்துள்ளார் அவர்.