Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ரேஷ்மா திருமணம் என பரவும் வதந்தி

'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்ற கேரக்டர் மிகப்பெரிய ஹிட். அதில் நடித்தவர் ரேஷ்மா. இவர் நடிகர் பாபி சிம்மாவின் உறவினர்.

அதன்பிறகு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அவர். அங்கு அவருக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் தான் கணவர் மூலமாக பட்ட கஷ்டத்தை கூறி பலரையும் கண்கலங்கவைத்தார் அவர்.

இந்நிலையில் தற்போது ரேஷ்மா மீண்டும் திருமணம் செய்யப்போகிறார் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் உலா வருகிறது.

ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில் "Life is too short. Spend it with people who make you laugh & feel loved" எனகுறிப்பிட்டுள்ளார்.

அதை பார்த்து சிலர் ரேஷ்மா அடுத்து திருமணம் செய்யும் நபர் இவர்தான் என தவறாக செய்தி பரப்பியுள்ளனர். அது உண்மையில்லை என ரேஷ்மா ட்விட்டரில் விளக்கம் கூறியுள்ளார்.