நடிகை ஆலியா பட் பாலிவுட் சினிமா துறையில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர் என்பதால் எப்போதும் பல விஷயங்கள் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் அவர்.
ஆலியா பட் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அக்கா ஷாஹீன் பட் உடன் பங்கேற்றார். அப்போது அவர் தன் அக்கா மனஅழுத்தத்துடன் போராடியது பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.
அப்போது அவர் திடீரென கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும் அவர் அழுதுகொண்டே தான்இருந்துள்ளார்.
600 ரசிகர்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியில் தான் இது நடந்துள்ளது.