பிக்பாஸ் நடிகைக்கு அரசியல்வாதியின் மகன் பாலியல் தொல்லை.. இரவு விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிரபல தெலுங்கு நடிகை சஞ்சனா பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்றவர். மாடல் அழகியான சில நாட்களுக்கு முன்பு பப் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் எம்எல்ஏ நதீஸ்வர் மகன் ஆஷிஷ் தகாத முறையில் நடந்துகொண்டாராம்.
கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தபோது நடிகை வெளியே ஓடிவந்து உடனே சென்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் என்னை மாடியில் இருந்து கீழே தள்ள முயற்சித்தார். இதற்கு அந்த ஹோட்டல் சிசிடிவி சாட்சி என புகாரில் கூறியுள்ளார் அவர்.
இந்நிலையில் ஆஷிஷ் தற்போது தலைமறைவாகிவிட்டாரென கூறப்படுகிறது.