2 வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகர் படத்தில் அருவி அதிதி, யார் தெரியுமா?

நடிகைகள் by Tony

அருவி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் அதிதி பாலன். இவர் இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.

சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர், தற்போது முன்னணி நடிகர் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

ஆம், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின்பாலி நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக இவர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பூஜை இன்று நடக்க, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.