Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலியான ஆபாச புகைப்படம்.. Fake ட்விட்டர் கணக்குகள் பற்றி ரம்யா பாண்டியன் புகார்

ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அதன்பிறகு சமீபத்தில் சில மாதங்கள் முன்பு மொட்டை மாடியில் சேலையில் எடுத்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.

இந்நிலையில் அவர் பெயரில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவர் பெயரில் போலியாக பல கணக்குகள் மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர். அதில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண் மேலாடையை கழற்றி தூக்கி வீசுவது போன்ற போட்டோ தான் அது. ரம்யா பாண்டியன் தான் அது என இணையத்தில் வேகமாக பரவியது.

இதனால் கோபமான ரம்யா பாண்டியன் ட்விட்டரில் தன்னுடைய போலி கணக்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.