நடிகர் சுந்தர்.சி தற்போது v.z துரை இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் தான் இருட்டு. இப்படத்தின் ரிலீஸ் வரும் 11ஆம் தேதி என்று படகுழு அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் தெலுங்கு நடிகை சாக்ஷி சவுத்திரி கதநாயகியாக நடித்துள்ளார். மேலும், இவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள சாக்ஷி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார்.
கேள்வி என்னவென்றால் 'நீங்கள் யாருடன் லிப் லாக் சீன் நடிப்பதற்கு விரும்புவீர்கள்?'. இதற்கு பதிலளித்த நடிகை சாக்ஷி தளபதி விஜயுடன் எனக்கு லிப் லாக் சீன் நடிப்பதற்கு ஆசை என்று ஓப்பனாக கூறியுள்ளார்.
இவர் இருட்டு படத்தில் சுந்தர்.சி உடன் மிக நெருக்கமாக லிப் லாக் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.