Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உன் முகம் சரியில்லை.. பட்ட அவமானம் பற்றி பேசிய ராகுல் ப்ரீத்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி தற்போது ஹிந்தி சினிமாவிலும் படிப்படியாக கால்பதித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஆரம்பகாலத்தில் பட்ட அவமானங்கள் பற்றி பேசியுள்ளார் அவர். "சிலர் என்னை பார்த்து என் முகம் பற்றி பேசி அவமானப்படுத்துவார்கள். நீங்கள் நன்றாக தான் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் உங்களுக்கு இருப்பது generic face என கூறுவார்கள்" என ராகுல் தெரிவித்துள்ளார்.

"எல்லோருக்கும் என்னை பிடிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு பிடிக்காமல் போனால் கவலை இல்லை. எனக்கு என் தோற்றம் பிடித்திருக்கிறது. அதனால் பாதி பிரச்சனை தீர்ந்தது" என பாசிட்டிவாக பேசியுள்ளார் ராகுல்.