Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Encounter கொண்டாடப்பட வேண்டிய விஷயம் அல்ல.. சமந்தா கருத்து

சென்ற மாதம் ஹைதராபாத்தில் ஒரு பெண் கால்நடை மருத்துவர் 4 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கைதான அந்த 4 பேரையும் என்கவுன்டரில் சுட்டு கொன்றது. பலரும் இதற்காக போலீசுக்கு நன்றி தெரிவித்தனர். நடிகை நயன்தாரா இதுபற்றி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா இந்த சம்பவம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். "என்கவுண்டர் சந்தோசப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஆனால் இந்த சமயத்தில் பயம் என்பது மட்டும் தான் இதற்கு தீர்வு என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன."

"அதற்கு நீதி வாங்குவதற்குள் நீண்ட காலம் ஆகிவிடும். நம் நீதி துறையினையும், சட்டங்களையும் சரி செய்யவேண்டிய அவசியம் வந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் நீதிக்காக நீண்ட காலம் காத்திருக்க கூடாது. அதே நேரத்தில், இந்த என்கவுண்டரை நான் கொண்டாடமாட்டேன். அது சந்தோசப்பட வேண்டிய விஷயம் அல்ல" என சமந்தா கூறியுள்ளார்.

மேலும் ட்விட்டரில் பேசிய அவர் "நான் இந்த சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணுக்கு இரங்கல் கூட கூறவில்லை என ட்விட்டரில் விமர்சிக்கிறார்கள். பெண்களுக்காக நான் எதுவுமே செய்யவில்லை என வருத்தமாகத்தான் இருந்தது. ஒரு ட்விட் செய்வதால் மட்டும் அந்த குற்ற உணர்ச்சி போய்விடாது" என தெரிவித்துள்ளார்.

loading...