Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை

விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் இந்துஜா. மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன அவரை அடுத்து பல முன்னணி இயக்குனர்கள் அணுகிவருகிறார்கள்.

ஆனால் அவர் தனக்கு கமெர்ஷியல் படங்கள் மட்டும் தான் வேண்டும், விருது வாங்கும் படங்கள் வேண்டாம் என கூறிவிட்டார் என செய்தித்தாள்களில் செய்தி வந்திருக்கிறது.

அதை பார்த்துவிட்டு அதிர்ச்சியான நடிகை இந்துஜா ட்விட்டரில் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டு தன் வேதனையை கூறியுள்ளார்.

"சினிமா மீது பைத்தியமாக இருக்கிறேன். நான் அப்படி கூறவே இல்லை. உங்கள் வார்த்தைகள் வேதனை அளிக்கிறது" என கூறியுள்ளார் அவர்.