Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை சமந்தா

தமிழ் தெலுங்கு போன்ற இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடித்து சென்ற வருடம் வெளிவந்த படம் தான் 'யு டர்ன்'. இப்படம் கன்னட மொழியில் தான் முதன் முதலில் வெளிவந்தது, பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அதில் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பாலிவுட்டிலும் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வந்துள்ளது.

இதில் கதநாயகியாக சமந்தாவையே நடிப்பதற்கு பட குழுவினர் கேட்டுள்ளனர். ஆனால் அந்த வாய்ப்பை நிகராகரித்து விட்டாராம் சமந்தா. தற்போது நடிகை டாப்சீ இந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இப்படி சமந்தா பாலிவுட் வாய்ப்பை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு வந்த பல பட வாய்ப்புகளை சமந்தா நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.