Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் இவ்வளவு நாள் நடிக்காததன் பின்னணி! சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகை மீனா

ரஜினி அங்கிள் என்ற அந்த குரலை யாராலும் மறக்க முடியாது. அந்த குரலுக்கு சொந்தகாரியாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா.

ஒரு ஹீரோயினாகவும் ரஜினி, விஜய் என பல ஹூரோக்களுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்தார்.

நீண்ட வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் நடிப்பதன் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வருகிறார்.

இவ்வளவு வருடங்கள் அவர் தமிழில் நடிக்காதது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தமே. இந்நிலையில் அவர் தான் நடிக்காதது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

இதில் அவர் மலையாள படங்களில் கதை வலுவாக இருக்கும். நடிகர்களுக்காக கதையில் பெரியளவில் மாற்றம் இருக்காது. யார் நடிக்கிறார்கள் என்பதை விட கதாபாத்திரம் தான் முக்கியம். இது போல மற்ற மொழிகளில் இல்லை. தமிழ், தெலுங்கிலும் மெல்ல இந்த மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. இது இன்னும் அதிகமாகி நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறியுள்ளார்.

loading...