Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்ட நடிகை சினேகா- இதெல்லாம் செய்தாரா?

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். அடிமுறை என்கிற தற்காப்பு கலை பற்றி இப்படம் பேசியுள்ளது.

படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக படம் ஓடிக் கொண்டிருக்க பட்டாஸ் குறித்து பேட்டியளித்துள்ளார் இயக்குனர் துரை செந்தில் குமார்.

அதில் அவர், சினேகா வேடத்திற்கு முதலில் நிறைய பேரை தேர்வு செய்தோம், ஆனால் கடைசியில் இவரே சரியான தேர்வு என கமிட் செய்தோம்.

இந்த படத்திற்காக நன்றாக உழைத்தார்கள், பிளாஷ்பேக் காட்சிகள் எடுக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. பின் சில காட்சிகளை சென்னையில் படம் பிடித்தபோது அவர் கர்ப்பமாக இருந்தார். எப்படி அவரை வேலை வாங்குவது என கஷ்டமாக இருந்தது.

அவரும் அந்த நிலைமையில் நைட் ஷுட், சண்டை காட்சி எடுக்கும் போதெல்லாம் கஷ்டப்பட்டார்கள்.

ஆனாலும் எங்களுக்காக அதை முடித்துக் கொடுத்தார்கள் என்றார்.