Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இது அஜித்துக்கும் அவமானம்.. மோசமாக பேசிய நபர்களுக்கு கஸ்தூரி பதிலடி

நடிகை கஸ்தூரி தன்னை பற்றி மோசமாக ட்விட்டரில் பேசிய சில நபர்களை பற்றி கோபத்துடன் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.

நடிகர் அஜித்தின் ரசிகர் என கூறிக்கொண்டு ட்விட்டரில் அந்த குறிப்பிட்ட சிலர் பெண்கள் பற்றி மிக மோசமான வார்த்தைகளில் பதிவிட்டுள்ளதை screenshot எடுத்து கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.

"இவர்கள் அஜித்துக்கு அவமானத்தை தான் தேடி தருகிறார்கள். நேர்கொண்ட பார்வை மாதிரி பெண்ணியம் சார்ந்த படங்களில் நடிக்கிறார். ஆனால் அதில் கூறியதை எதையும் follow பண்ணாமல் இப்படி அவரது பெயரை கெடுக்கிறார்கள். அவர்கள் என்னை கெட்ட வார்த்தைகளில் பேசுவது எனக்கு மட்டும் அவமானம் இல்லை அஜித்துக்கும் அவமானம் தான்" என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

"#DirtyAjithFans என்று அந்த குறிப்பிட்ட சிலரை தான் கூறினேன், அனைத்து அஜித் ரசிகர்களையும் கூறவில்லை. நானும் அஜித் ரசிகை தான்" எனவும் கூறியுள்ளார் கஸ்தூரி.