Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

600 படங்களை எடுத்த பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மரணம்! குடும்பத்தினர் சோகம்

தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுக்க கொண்டு சென்றவர்கள் பலர். அதில் ஒரு சிறப்புக்குரியவர் எஸ்.எம்.உமர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை இவருக்கு வயது 96. உடல் நலக்குறைவால் பாதிகப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காலமானார்.

அவரின் உடல் முற்பகல் 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 20 வயதில் சினிமாவிற்குள் நுழைந்து உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என கலக்கியுள்ளார்.

மேலும் 600 படங்களை வியட்நாம் மொழியில் டப் செய்து வெளியிட்டுள்ளார். பிரபல நடிகர்களுக்கு மிகவும் நெருக்கமான இவர் இளம்பிறை, கதம்பம், குரல், உமர் கய்யாம் என்ற பத்திரிக்கைகளை நடத்தினார்.

இவருக்கு தமிழக அரசு விருது, புதுச்சேரி அரசு விருது, கலைமாமணி விருது, கலைச்செல்வர் விருது, கலை சுடர் விருது என விருதுகள் கிடைத்துள்ளது.

You May Like This Video

loading...