Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம் - எந்த படத்தில் தெரியுமா ?

சமீப காலமாக நடிகர் விஜய் சேதுபதியின் படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதனால் ரசிகர்களால் நடிகர் விஜய்யுடன் இவர் இணைந்து நடிக்கும் "மாஸ்டர்" திரைப்படம் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடித்து வரும் படம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". இப்படத்தில் மேகா ஆகாஷ், விவேக், மகிழ் திருமேனி, கனிகா, ரகு ஆதித்யா, ரித்விகா, சிவரஞ்சனி நடிக்கின்றனர்.

மேலும் தற்போது பிக்பாஸ் மற்றும் சில படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரித்விகா இப்படத்தில் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் ரித்விகா எனவும் தெரிவிக்கின்றனர், இவரை வைத்து தான் கதையே உள்ளது எனவும் கூறப்படுகிறது.