Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதுக்கு அப்படியே போஸ் கொடுத்திருக்கலாம்.. கவர்ச்சி உடையை ட்ரோல் செய்தவருக்கு பிக்பாஸ் மீரா மிதுன் பதிலடி

பிக்பாஸ் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். அழகி போட்டிகள் நடத்துவது தொடங்கி, பிக்பாஸ் பிரச்னைகளை என அவர் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

அவர் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிட்டு வரும் ஹாட் புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் மோசமான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். கமெண்டுகளில் மிக கேவலமாக பலரும் பேசுவதுண்டு.

அப்படி நெட்டிசன் ஒருவர் மீரா மிதுனின் போட்டோ ஒன்றை பார்த்துவிட்டு 'இதுக்கு நீ டிரஸ் இல்லாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம்' என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு மீரா மிதுன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார்.

"தென்னிந்தியாவில் இருந்து மாடலிங்கில் யாரும் அதிகம் செல்லாததற்கு நம் culture தான் காரணம். நானும் அதை மதிக்கிறேன். இந்த மாதிரி expose பண்ண கூடாதுனு, open பண்ண கூடாதுனு நினைக்குறேன். எங்க அப்பா ஒரு பாடி பில்டர். மிஸ்டர் மெட்ராஸ் வின் பண்ணி இருக்கார். அவர் எனக்கு சுதந்திரம் கொடுத்தார். அதனால் நானும் expose பண்ணேன்" என மீரா மிதுன் கூறியுள்ளார்.

மேலும் 'உடை இல்லாமல் போஸ் கொடுக்கலாமே' என சிலரிடம் இருந்து வரும் இது போன்ற கமெண்டுகள் பழகிவிட்டது, அதையெல்லாம் ignore செய்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு FM சேனலுக்கு அளித்த பேட்டியில்தான் மீரா மிதுன் இப்படி பேசியுள்ளார்.