Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதுமண தம்பதியாக வரலாற்று சிறப்பு மிக்க இடத்திற்கு விசிட் செய்த யோகிபாபு! வைரலாகும் போட்டோ

யோகி பாபு சினிமாவில் தவிர்க்க முடியாத நபராகிவிட்டார். திரையில் அவர் வந்து நின்றாலே ரசிகர்களுக்கு குஷியாகிவிடுவார்கள். அதில் வசனம் பேசி கவுண்டர் கொடுத்தால் ரசிகர்கள் கலகலவென சிரித்து விடுவார்கள்.

ஹீரோவாகவும் காமெடி படங்களில் நடித்து வருகிறார். அவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் அண்மையில் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

இதனையடுத்து இருவரும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை யோகி பாபு வெளியிட்டுள்ளார்.

யோகி பாபு தீவிர முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.