Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அந்த ஒரு சம்பவம்! பரப்பரப்பை ஏற்படுத்திய நிகழ்வு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக, வெப்சீரிஸாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இதில் கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்க அரவிந்த் சாமி எம்.ஜி.ஆராக நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் படம் வரும் ஜுன் 26 ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ஜெயலலிதாவின் இளமைகாலம், சினிமாவில் வந்தது, அரசியல் ஈடுப்பாடு என பல நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன் எம்.ஜி.ஆரின் உடலை அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஏற்றி கடற்கரைக்கு கொண்டு சென்ற போது அருகில் இருந்த ஜெயலலிதாவை கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவும் தன்னை தள்ளிவிட்டார்கள் என குற்றம் சாட்டினார். இந்த சம்பவமும் படத்தில் இடம் பெறுகிறதாம்.

எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்ப ராஜாஜி ஹாலில் அரங்குகள் அமைக்கப்பட்டு இந்த சம்பவ கதை படமாக்கப்பட்டு வருகிறதாம்.