Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அமலா பாலிடம் அத்துமீறிய நபர்! நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

நடிகை அமலா பாலிடம் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் ஆபாசமாக பேசியதாக கடந்த ஆண்டும் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வந்தனர். இந்நிலையில் அமலா பால் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் இந்த வழக்கை ரத்து செய்வதோடு, விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டுமென பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.