Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிரட்டல் காட்டிய திமிரு நடிகையின் மகளா இது! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

விஷால் நடித்த திமிரு படத்தில் மிரட்டலாக நடித்ததன் மூலம் பலரையும் திரும்பிபார்க்க வைத்தவர் ஸ்ரேயா ரெட்டி. வில்லியாக ஈஸ்வரி கேரக்டரில் நடித்த இவர் யார் என அந்நேரத்தில் பலரும் தேடினார்கள். பின் வெயில், பள்ளிக்கூடம் படங்களில் நடித்திருந்தார்.

2008 ல் அவர் நடிகர் விஷாலின் சகோதரரான நடிகரும் தயாரிப்பாளரும் விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.திருமணத்திற்கு பின் அவர் படங்களில் ஏதும் நடிக்கவில்லை.

தற்போது ஜிம், குழந்தை வளர்ப்பதில் மிகவும் பிசியாக இருக்கும் அவர் தற்போது நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரின் மகளுக்கு பனிச்சறுக்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கிறார். என்னை விட என் மகள் ஈஸியாக கற்றுக்கொண்டாள். அவள் தான் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.

அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.


loading...