Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் இவரா..! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் செல்வி ஜெ. ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர்-ராக அரவிந்த் சாமி நடித்து வரும் படம் தலைவி.

இப்படத்தில் இருந்து இவர்களின் இரு First லுக் போஸ்டர் மற்றும் விடியோவும் வெளிவந்தது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிராகேஷ் ராஜ் நடித்து வருகிறார்.

மேலும் இப்படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் சசிகலா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்திருந்தது. ஆனால் தற்போது இந்த கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக நடிகை பூர்ண நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி ஜானகி அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை மதூ பாலா நடிக்கவிற்பதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளது.