பிக்பாஸ் மீரா மிதுன் எதாவது பேசினாலே சர்ச்சைதான் என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு சர்ச்சையாக பேசிவருகிறார் அவர்.
ஒரு வாரத்திற்கு முன்பு அவர் கொடுத்த பேட்டியில் தான் நித்யானந்தாவின் அழைப்புக்காக காத்திருப்பதாக கூறியிருந்தார். அதை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் மீரா மிதுன் தனக்கு சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். 'சின்ன வயதில் தெரியாமல் பணத்திற்காக செய்த தவறை தாண்டி தற்போது தைரியமாக நடிகையாகி பல நல்ல விஷயங்களை சன்னி லியோனி செய்து வருகிறார்' என மீரா மிதுன் கூறியுள்ளார்.