Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலட்சுமியை அந்த மாதிரி விஷயத்திற்கு அழைத்த நபருக்கு பதிலடி, ராதிகா சரத்குமார் செய்த விஷயம்

தமிழில் சிம்பு நடிப்பில் வெளிவந்த போட போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமார் அவர்களின் மகள் என்பதனை நாம் அறிவோம்.

இதன்பின் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் வரலட்சுமி.

சமீபத்தில் பிரபல நேர்காணல் ஒன்றில் பேசும் பொழுது "தன்னை பட வாய்ப்பிற்காக, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக தைரியமாக" கூறியிருந்தார் வரலட்சுமி.

மேலும் அதற்கு தன்னிடம் காலில் பேசிய ஆதாரங்கள் இருப்பதாக பதிலடி கொடுக்கும் விதத்தில் நேர்காணலில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பல வித பாராட்டுகள் சமூக வலைதங்களில் இவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு இவரது சித்தி நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் "Well said Varu, more strength to you" என்று தனது மகளை பார்ட்டும் விதத்தில் ஓர் பதிவை வெளியிட்டிருந்தார்.

அண்மையில் இவர் ராதிகா அவர்களை தனது பேட்டி ஒன்றில் அவர் எனது தாய் அல்ல அவர் எனக்கு ஆண்ட்டி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.