Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக தன் பெண் குழந்தையின் போட்டோவை வெளியிட்ட நடிகை சினேகா!

நடிகை சினேகா கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான பட்டாஸ் படத்தின் அடிமுறை சண்டைக்கலை கற்றவராக தனுஷுக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

அவரின் கணவர் பிரசன்னா முக்கியத்துவமான வேடங்களை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அருண்விஜய்யுடன் மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சினேகாவுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இதனை பிரசன்னா டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போது சினேகா தன் பெண் குழந்தையை உலகத்திற்கு மகளிர் தின ஸ்பெஷலாக காட்டியுள்ளார்.

இது குறித்த பதிவில் அவர் தன் அம்மா, சகோதரி, மகளை குறிப்பிட்டு என் வாழ்க்கையில் இந்த பெண்கள் இல்லாமல் நான் இல்லை என கூறி பெண்கள் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.