Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலின் காதலர் இவர் தானா? வெளிவந்த புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இதன்பின் விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தன்னை வைத்து பல படங்களை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனரான ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாட்டினால் இந்த திருமணம் விவகாரத்தில் சென்று முடிந்தது.

இதற்கு பிறகு தற்போது இணையத்தில் சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. ஆம் அமலா பால் தற்போது காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் அந்த நபர் அமலா பாலை கட்டிபிடித்தபடி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் அமலா பாலின் முகம் தெரியவில்லை.

இந்நிலையில் இதற்கு முன்பு அமலா பாலின் பல விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நபர் பதிவிட்டுள்ளார். இந்த விஷயங்கள் கூட இந்த சர்ச்சைக்கு மிகவும் முக்கிய காரமனாக விளங்குகிறது.

இதனை பிரபல வட இந்திய பத்திரிகை ஒன்று தனது நாளிதழில் தெரிவித்துள்ளது.