Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அமலா பாலுக்கு நடந்தது உண்மையான இரண்டாம் திருமணம் தானா? முழு விவரம் இதோ

தமிழ் திரையுலகில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இதன்பின் விக்ரம், விஜய் உள்ளிட்ட திரையுலக முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்று வந்தார்.

சென்ற வருடம் ரத்தாகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை படம் இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து நடிகை அமலா பால் தற்போது தனது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் ஏ. எல்.விஜய்யை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

இந்நிலையில் நடிகை அமலா பால் நேற்று, பிரபல பாடகரான Bhavninder சிங் என்பவருடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் தற்போது Bhavninder சிங்குடன் நடிகை அமலா பாலுக்கு உண்மையாக திருமணம் நடக்க வில்லை என்றும் அது ஒரு போட்டோஷூக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது.