Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் வெளியாகும் முன்பே நல்ல செய்தி சொன்ன மாஸ்டர்! மறக்க முடியாத பாடம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விஜய், விஜய் சேதுபதி பேசிய விசயங்கள் அரசியல் விமர்சனங்களுக்குள்ளாகின.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் குட்டி ஸ்டோரி பாடல் தான். மேலும் அவரே இப்பாடலை படத்தில் தன் குரலிலேயே பாடியிருந்தார்.

இப்பாடல் ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. இப்பாடலை தன்னம்பிக்கை மிகுந்த வரிகளால் நிரப்பியவர் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்.

விஜய்யும் எப்போதுமே அனைவரிடமும் தன்னம்பிக்கையுடன் பேசுவார் என பலரும் குறிப்பிடுவர்.

இந்நிலையில் அருண் ராஜா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றால் அனைவரும் வீடுகளில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலை எழுந்துள்ளதை வலியுறுத்தும் விதமாக தற்போது அவர் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.