Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

VJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் நடிகர்கள் நடிகைகள் நடித்துள்ளனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மற்றும் தொகுப்பாளினி ரம்யா, தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதில், "இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன.

மேலும் கவலை படாதீர்கள், நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.