Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

"இதனால் தான் நயன்தாரா NO.1 ஹீரோயினாக உள்ளார்" - ஆர்.ஜெ.பாலாஜி கூறிய மாஸ்ஸான பதில்..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். முன்னணி நடிகர்கள் போலவே இவருக்கும் மாஸ்ஸான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் தற்போது இவர் ஆர்.ஜெ.பாலாஜியின் இயக்கத்தில் முக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்துள்ளார். முதல்முறையாக அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பரப்பு எழுந்துள்ளது.

இதனிடையே இப்படம் நேரடியாக OTTயில் வெளியாகும் என கூறப்பட்டது, இதற்கு பதிலளித்த ஆர்.ஜெ.பாலாஜி முக்குத்தி அம்மன் OTTயில் வெளியாகாது, தியேட்டரில் தான் வெளியாகும்.

மேலும் நயன்தாரா குறித்து அவர் கூறுகையில், "நான் வேலை செய்த நடிகைகளிலே நடிகை நயன்தாரா தான் நேரம் தவறாது படப்பிடிப்பிற்கு வருபவர். அதனால் தான் ஆணாதிக்கம் உள்ள இந்த சினிமா துறையில், இப்போதும் NO.1 ஹீரோயினாக உள்ளார்" என பதிவிட்டுள்ளார்.