Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதனால் தான் விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்.. சர்கார் பட நடிகை ஓபன் டாக்

முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து 2018ஆம் ஆண்டு வெளிவந்த படம் சர்கார். இப்படத்தில் வரலட்சுமிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை துளசி.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் " சர்கார் படத்திற்கு முன்னதாகவே நான் விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளேன்".

"ஆம், கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால், அப்போது நான் மிகவும் குண்டாக இருந்ததால் என்னிடம் இருந்து அந்த வாய்ப்பு கைநழுவி போனது. ஆனால், சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துவிட்டேன்" என்று கூறினார்.