Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5 வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா? விவரம் உள்ளே

தனது எதார்த்தமான நடிப்பினால் தற்போது மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இவர் தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘புஷ்பா’ என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம்.மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.