Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கன்னித்தன்மையுடன் இருப்பதே தவறு! கொச்சையான வசனங்கள், சர்ச்சைக்காட்சிகள் - இது அந்த படத்தின் காப்பியாம்

கொரோனா விசயத்தில் ரஷ்யாவை இந்தியா நெருங்கிவிட்டது என்பது தான் இன்றைய சூடான செய்தி. உலகையே பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது இந்த கொரோனா வைரஸ் நோய்.

பாதிக்கப்பட்ட தொழில்களில் சினிமா தொழிலும் ஒன்று. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்புகள் இல்லை என்பதால் தயாரிப்பாளர்களும், ஊழியர்களும் மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்ட படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா மற்றும் அவரின் காதலர் கௌதம் குலாட்டியுடன் இணைந்து நடித்த வெர்ஜின் பானுப்பிரியா என்ற திரைப்படம் வரும் 12 ம்தேதி வெளியாகவுள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில் கன்னித்தன்மையுடன் இருப்பது தவறும், அதை இழக்க ஒரு கதாநாயகி முயலும் போது தோல்வி அடைவதை கவர்ச்சியாகவும், நகைச்சுவையாகவும் காட்டியுள்ளார்கள்.

இதிலிருக்கும் காட்சிகள் வசனங்கள் மிகுந்த சர்ச்சையாகியுள்ளது. படத்தை தடை செய்யுமாறு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் ஈஸி ஏ என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.