இளம் நடிகையை வற்புறுத்தி ஆசைக்கு இணங்க வைத்து வாழ்க்கையை கெடுத்த நண்பர்! வீடியோ எடுத்து மிரட்டல்
சினிமா நடிகைகளுக்கு தொந்தரவுகள் பல இடங்களில் அரங்கேறுகின்றன. இது போன்ற சம்பவங்கள் குறித்து Me Too என்ற Tag ல் பேசப்பட்டன. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு உடனே தண்டனை கிடைப்பதில்லை என்பதை நினைக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த மனவருத்தமே.
இந்நிலையில் பெங்காலி சீரியல் நடிகை ஒருவர் ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் தனக்கு அறிமுகமான ஒருவர் தன்னிடம் உதவி கேட்டு வீட்டு வந்ததாகவும், தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கற்பழித்துவிட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.
மேலும் இவ்விசயத்தை போலிஸ்க்கு கூறினால் வீடியோவை வெளியிடுவேன் என கூறி அந்த நபர் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
நடிப்பிலும், மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்த நடிகை குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை பழகி வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்த நபர் தொடர்ந்து வீட்டுக்கு வந்து பண உதவி கேட்டு தவறாக நடந்துகொண்டதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்துள்ளார்.